கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த டிமான்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அஜய் ஞானமுத்து. திகில் திரைப்படமான இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்பு அதர்வா, நயன்தாரா அனுராக் கஷ்யப் வைத்து இமைக்கா நொடிகள் என்கிற படத்தை இயக்கினார். இயக்குனருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி தந்தது இப்படம். 

AjayNyanamuthu

தற்போது சியான் விக்ரம் வைத்து கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். இதில் இர்ஃபான் பதான், ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். 

AjayGnanamuthuinsta AjayGnanamuthu

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அதில் அவரது ஃபேவரைட் ஹீரோ பற்றி கேட்டதற்கு தளபதி விஜய் எனக்கூறி, அவர் என் தலைவன் என்று பதிவு செய்துள்ளார். சிலரை பற்றி வார்த்தைகளில் விவரிக்க முடியாது எனக்கூறியுள்ளார்.