தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த நட்பே துணை திரைப்படத்தின் மூலம் நடிகை அனகா தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

கடைசியாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படமான டிக்கிலோனா திரைப்படத்தில் நடிகை அனகா கதாநாயகியாக நடித்திருந்தார். இதனையடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான அல்லிப்பூல வெண்ணிலா என்ற பாடலிலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் பபூன் படத்திலும் அனகா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் அனகா நடிப்பில் விரைவில் வெளிவரும் "மீண்டும்" திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

தல அஜித் குமாரின் மெகா ஹிட் திரைப்படமான சிட்டிசன் மற்றும் ஏபிசிடி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளிவரும் மீண்டும் திரைப்படத்தில் நடிகர் கதிரவன் மற்றும் அனகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவில், நரேன் பாலகுமார் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு “மீண்டும்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று “மீண்டும்” திரைப்படத்தின் விருவிருப்பான ட்ரெய்லர் வெளியானது. விரைவில் திரைக்கு வரும் “மீண்டும்” படத்தின் ட்ரெய்லர் கீழே உள்ள லிங்கில் காணலாம்.