விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கி மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியிருக்கிறது செந்தூரப்பூவே தொடர்.ரஞ்சித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஹீரோயினாக இந்த தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா முக்கிய வில்லி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.யமுனா சின்னதுரை,சாந்தி வில்லியம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராக அதிவிரைவில் அவதரித்தது.இந்த தொடர் தற்போது 200 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் ரஞ்சித்தின் முதல் மனைவியாக ரஞ்சித்தின் நிஜ மனைவியுமான பிரியா ராமனின் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தினார்.

இந்த தொடரில் வில்லியாக நடித்து அசத்தி வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி தொடரில் பங்கேற்று பிரபலமானார்,இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் சில பட வாய்ப்புகள் வர அதில் பிஸியாக தற்போது நடித்து வருகிறார்.படங்களில் பிஸி ஆகி உள்ளதால் இந்த சீரியலில் இருந்து இவர் விலகியுள்ளார் இவருக்கு பதிலாக பிரபல நடிகை நடித்துள்ள எபிசோடுகள் இன்று முதல் ஒளிபரப்பாகின்றன.