தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். இம்மாதம் முதல் நாளே ஜகமே தந்திரம் படத்தின் பாடல் அப்டேட்டை வெளியிட்டு அசத்தினார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.  

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல் தனுஷ் பிறந்தநாளன்று வெளியானது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு அத்ரங்கி ரே எனும் பாலிவுட் படத்தில் நடிக்கவிருந்தார் தனுஷ். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் D43 படத்திலும் நடிக்கவிருக்கிறார். 

வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும். இவர் இயக்கவுள்ள திரைப்படம் நான் ருத்ரன். இது தனுஷுக்கு இரண்டாவது படமாகும். தேனாண்டாள் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நாகர்ஜுனா, அதிதி ராவ் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். மேலும் எஸ்ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கஸ்தூரி ராஜா எனும் ஆகச்சிறந்த படைப்பாளியின் மகனாக திரைத்துறையில் நுழைந்தாலும், இன்று தனுஷ் இருக்கும் உயரத்திற்கு முக்கிய காரணம் அவர் சிந்திய வியர்வை துளிகள் தான். அவமானங்களை அடையாளமாக மாற்றலாம் என நிரூபித்து காட்டிய தனுஷின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தனது சகோதர சகோதரிகளுடன் போஸ் தருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அப்போவே ஸ்டைலாக போஸ் தருகிறார் தனுஷ் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

dhanush unseen photo goes viral