தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் சிறந்த நடிகருமான நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் சேட்டையான சுருளி என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.

நடிகர் தனுஷுக்கு கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க, பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். மேலும் கலையரசன், வடிவுக்கரசி, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Y NOT ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்திருந்தார். முன்னணி இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஜகமே தந்திரம் திரைப்படத்தின்  ஒட்டுமொத்த ஒரிஜினல் பின்னணி இசை அடங்கிய OST தொகுப்பு வெளியாகி உள்ளது. இந்த ஒரிஜினல் பின்னணி இசை அடங்கிய OST வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாறன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.