நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை பெற்றவர் டிடி. இசை, நடனம், காமெடி என பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரது இயல்பான நகைச்சுவையால் திரைப்பிரபலங்களையும் ரசிகர்களாக மாற்றியவர். சின்னத்திரை மட்டுமல்லாமல் நளதமயந்தி, பவர் பாண்டி போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்தார். 

டிடி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமா சின்னத்திரை என தொடர்ந்து வந்தார் டிடி. ஆனால் அதற்கு கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர். 

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இதில் அவரது இரண்டாவது காதலரும் பங்கேற்றதாக தகவல் பரவியது. தற்போது மாலத்தீவில் ஓய்வை கழித்து வருகிறார் டிடி.

மாலத்தீவில் போட் ஹவுஸில ஓய்வை கழிக்கும் ஃபோட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். மாலத்தீவில் பிகினியில் அவர் ஆட்டம் போட்ட வீடியோக்கள் வைரலானது. இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் டிடி. 

அதில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடியப்படியே சாட் பேப்பரில் எழுதியுள்ள வாசகங்களை காட்டியுள்ளார். அதன்படி, 36 வயசு சிங்கிளாக இருக்கிறேன்.. 36 வயசு விவாகரத்தாகியிருக்கிறேன்.. 36 வயசு இன்னும் குழந்தை இல்லை.. ஆனாலும் ஹேப்பி.. ஏன்னா ஒவ்வொருவருடைய டைம் லைனும் வேற.. உங்களுடைய டைம்லைனை என்ஜாய் செய்யுங்கள்.. ஹேப்பி வுமன்ஸ் டே என எழுதப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)