கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

David Warner Dancing For Jr NTR Pakka Local Song

இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது மனைவி குழந்தைகளுடன் டிக் டாக்கில் அசத்தி வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான அல வைக்குந்தபுரம்லோ படத்தின் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டார். அதன் பின் பிரபு தேவாவின் முக்காலா பாடலுக்கு நடனமாடியிருந்தார். 

David Warner Dancing For Jr NTR Pakka Local Song

தற்போது ஜூனியர் NTR நடித்த ஜனதா கராஜ் படத்தின் பக்கா லோக்கல் பாடலுக்கு நடனமாடி டிக்டாக் செய்துள்ளார் டேவிட் வார்னர். கொரடாலா சிவா இயக்கிய இந்த படம் 2016-ம் ஆண்டு வெளியானது. காஜல் அகர்வால் இந்த பாடலுக்கு நடனமாடியிருப்பார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த பாடலுக்கு இசையமைத்திருப்பார். இன்று ஜூனியர் NTR-ன் பிறந்தநாள் என்பதால் இந்த டான்ஸ் வீடியோவை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.