தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது. தடம், செக்க சிவந்த வானம், மாஃபியா என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். தற்போது நவீன் இயக்கத்தில் உருவான அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். 

Arun Vijay Shares His Gym Workout Video

ஊரடங்கால் ஜிம்முக்கு செல்ல இயலாமல் வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜிம் ஒர்க்-அவுட்டை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.  

Arun Vijay Shares His Gym Workout Video

சமீபத்தில் நடிகர் அருண் விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை கூறினார். பயிற்சியாளர்களின் துணை இல்லாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்றும், முறையான ஜிம் உபகரணங்களுடன் ஓர்க்-அவுட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக பாக்ஸர், சினம், ஜிந்தாபாத் போன்ற படங்கள் திரைக்கு வரவுள்ளது.