கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

ekalakhani

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர். சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

ponniyinselvan ponniyinselvan

தற்போது இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானியிடம் பொன்னியின் செல்வன் படம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஏகா லக்கானி, கனவு நனவானது போல் உள்ளது. நிச்சயம் என்னுடைய பெஸ்ட்டை தருவேன் என்று பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, செக்கச் சிவந்த வானம், காற்று வெளியிடை போன்ற படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த படைப்பிற்காக மிகுந்த ஆவலில் காத்திருக்கின்றனர் திரை விரும்பிகள்.