தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. சீரியலில் நடித்து வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிந்தன. சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் தனது காமெடியான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். 

MynaNandhini

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

MynaNandhini

இந்நிலையில் மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது கணவருடன் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@yogeshwaram_official @balasubramaniyanrajendran ❤️❤️😍❤️❤️vathi coming

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on