மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை ஷகீலா  மலையாளத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

90-களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷகீலா நீண்ட கவனமாக பலரது அபிமான கவர்ச்சி நாயகியாக திகழ்ந்தார். கிளாமர் என்றாலே ஷகீலா தான் என சொல்லும் அளவுக்கு நடிகை ஷகீலா உச்சத்தில் இருந்தார். சமீபத்தில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை ஷகீலா. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையலில் நடிகை ஷகீலா ஒரு கலக்கு கலக்க மொத்த உலகமும் ஷகீலாவின் மறுபக்கத்தையும் பார்த்தது. ஷகிலா என்றாலே கவர்ச்சி, கிளாமர் ஆபாசம் என பேசிய அனைத்து உதடுகளும் ஷகிலா அம்மா என சொல்லும் அளவிற்கு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார் நடிகை ஷகிலா.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை ஷகீலா இறந்துவிட்டதாக கேரள மாநிலத்தில் பல வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது நடிகை ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், 

அனைவருக்கும் வணக்கம்... நான் இறந்து விட்டதாக பரவிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்!!!  நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்... அதே புன்னகையோடு நலமுடன் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறேன்... என் மீது அக்கறை கொண்டு போனில் விசாரித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்!!! என்னுடைய உடல்நிலை பற்றி கவலையுற்ற அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்!!!  நான் இறந்து விட்டதாக செய்தி பரப்பிய நபருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்... அவரால் மீண்டும் நீங்கள் அனைவரும் என்னை கவனித்து இருக்கிறீர்கள்... எனவே அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!!! 

என வீடியோ மூலம் தெரிவித்தார். ஷகிலா இறந்து விட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஷகிலா வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.