குக் வித் கோமாளி பிரபலத்தின் கலக்கல் நடனம் ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | February 06, 2021 15:08 PM IST
தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.அப்படி விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் பல காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலன்களாக மாறியுள்ளனர்.
புகழ்,பாலா,ஷிவாங்கி உள்ளிட்டோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு நட்சத்திர அந்தஸ்தை எட்டி விட்டனர்.முதல் சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை விஜய் டிவி தொடங்கினர்.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை விட இந்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் புதுவராவாக சீரியல் நடிகை ரித்திகா இந்த வாரம் வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் முக்கிய நபராக இருக்கும் புகழ் , தற்போது வெளியாகி செம ஹிட் அடித்து வரும் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்றிற்கு நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.
#MasterTheBlaster 😂 எப்டி இருக்கு மக்களே 😂 #Master @actorvijay @Dir_Lokesh @imKBRshanthnu pic.twitter.com/bmtvzTSJAx
— Pugazh VijayTv🎭 (@Pugazh_VijayTv) February 5, 2021