விஜய் டிவியின் அவளும் நானும் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா.தொடர்ந்து ஜீ தமிழில் முள்ளும் மலரும்,சன் டிவியின் மின்னலே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.விஜய் டிவி சமீபத்தில் செந்தூரப்பூவே என்ற தொடரின் ஒளிபரப்பை தொடங்கியது.

ரஞ்சித் ஹீரோவாகவும்,ஸ்ரீநிதி ஹீரோயினாகவும் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் தர்ஷா குப்தா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

லாக்டவுன் நேரத்தில் கொரோனா அளவுக்கு பிரபலமாக இருந்தவர் தர்ஷா குப்தா அவர் போடும் போட்டோக்களுக்கும்,டிக்டாக் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வந்தனர்.லாக்டவுன் நேரத்தில் அதிக ரசிகர்களை தர்ஷா பெற்றுவிட்டார்.அவ்ரகளுடன் அவ்வப்போது கலந்துரையாடி ரசிகர்களை மகிழ்விப்பார் தர்ஷா.

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் தர்ஷா.சில வாரங்களுக்கு முன் இவர் இந்த தொடரில் இருந்து எலிமினேட் ஆனார் இருந்தாலும் ரசிகர்கள் அன்பு குறையாமலேயே இருந்தது.இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.இதனை ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

A post shared by Dharsha (@dharshagupta)