கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடித்துவரும் படம் கோப்ரா.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Cobra Will Have 5 Songs Vikram AR Rahman

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Cobra Will Have 5 Songs Vikram AR Rahman

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.கலாட்டாவுடனான சிறப்பு நேர்காணலில் படம் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கச்சென்ற போது அவர் இந்த படத்தை ஒத்துக்கொள்வாரா என்று தெரியாது அதனால் நல்ல டிரஸ்சாக போட்டுகொண்டு அவருடன் போட்டோ எடுத்து வந்துவிடலாம் என்று சென்றேன்.ஆனால் அவருக்கு கதை மிகவும் பிடித்திருக்க உடனே ஒத்துக்கொண்டார்.எந்த ஈகோவும் இல்லாமால் ஒரு பெரிய இசையமைப்பாளர் நான் சொல்லும் விஷயங்களையும் ஏற்றுக்கொண்டார்.

Cobra Will Have 5 Songs Vikram AR Rahman

இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன நான்கு பாடல்களை முடித்துவிட்டோம் இன்னும் ஒரு பாடல் மட்டும் மீதமுள்ளது.பின்னணி இசை வேலைகள் இன்னும் தொடங்கவில்லை விரைவில் தொடங்கவுள்ளோம்.விக்ரம் அதிக கேரக்டர்களில் வருவதால் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு தீம் மியூசிக் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த படத்தில் இப்போது வரை விக்ரம் பாடுவது குறித்து எந்த முடிவும் செய்யவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.