டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படம் கோப்ரா.சீயான் விக்ரம் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Vikram Suggested Kohli Dhoni For Cobra Movie

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Vikram Suggested Kohli Dhoni For Cobra Movie

மியா ஜார்ஜ்,ஆனந்த் ராஜ்,மிருணாளினி,கே.எஸ்.ரவிக்குமார்,ரோபோ ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கலாட்டாவுடனான சிறப்பு நேர்காணலின் போது படம் குறித்த சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டார் அஜய்.இர்பான் பத்தானின் டிக்டாக் விடீயோக்கள் சிலவற்றை பார்த்துள்ளேன் அவர் நடிப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.அதே நேரம் இது ரிஸ்க் என்றும் எனக்கு தெரியும் ஆனால் அதனை துணிந்து எடுக்கிறேன்.

Vikram Suggested Kohli Dhoni For Cobra Movie

முதலில் 2,3 நாட்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டார் பின்னர் ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் ஆக அவரும் மாறிவிட்டார்.டப்பிங்கில் எந்த பிழையும் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.இன்னும் விக்ரம் மற்றும் இர்பான் இருவரின் காம்பினேஷன் சீன்கள் எடுக்கவில்லை அந்த ஷூட்டிற்காக ஆவலாக காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

Vikram Suggested Kohli Dhoni For Cobra Movie

இந்த படத்தின் கதை சொல்வதற்காக மும்பை சென்றபிறகே பத்தானிடம் கதை சொல்லப்போவதை விக்ரமிடம் தெரிவித்தேன்.அவர் உடனே எனக்கு தோனி ரொம்ப புடிக்கும் அவரை ட்ரை பண்ணுங்க ,அதை விட கோஹ்லி நல்ல இருக்கும் என்று விக்ரம் தன்னை கலாய்க்க ஆரம்பித்தார் என்ற கதையையும் அஜய் தெரிவித்தார்.