ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் க/பெ.ரணசிங்கம். விருமாண்டி இயக்கிய இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

KaPae Ranasingam Movie First Look Poster

சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் பின்னணி இசைக்கான பணிகளை துவங்கியது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பதிவு செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பதிவு செய்தார். 

KaPae Ranasingam Movie First Look Poster

தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனைத்தொடர்ந்து நாளை காலை 11:03 மணியளவில் படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. டீஸரை காண மிகுந்த ஆவலில் உள்ளனர் மக்கள் செல்வனின் ரசிகர்கள்.