யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் புதிய அப்டேட் !
By Sakthi Priyan | Galatta | March 10, 2020 17:41 PM IST

சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். இயக்குனர்கள் மகிழ்திருமேனி மற்றும் மோகன் ராஜா முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை பழனியில் துவங்கி வைத்தார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருவதாக தகவல் தெரியவந்தது. தற்போது பிரபல காமெடியன் சின்னி ஜெயந்த் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.