தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்று கோகுலத்தில் சீதை இந்த தொடரின் நாயகனாக டான்ஸ் மாஸ்டர் நந்தா நடித்து வருகிறார்.இந்த தொடருக்கும் இவரது கதாபாத்திரத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்றுமொரு பிரபலமான சீரியல் ரெட்டை ரோஜா.இந்த தொடரின் நாயகியாக நடிகை சாந்தினி , லாக்டவுனுக்கு பிறகு என்ட்ரி கொடுத்தார்.இவர் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்து வரும் நந்தாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.சாந்தினி வந்த பிறகு இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தினர்.இதில் கலந்துகொண்ட நந்தா மற்றும் சாந்தினி இருவரும் தங்கள் வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டு,முத்தமிட்டு நடனமாடி அசத்தினார்,இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த முழு வீடியோ ஜீ தமிழின் பேஸ்புக் பக்கத்தில் உள்ளது.