உலக அளவில் ஹாலிவுட்டில் மட்டுமே சூப்பர் ஹீரோ திரைப்படங்களும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நிலையில் இந்தியாவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட சூப்பர்ஹீரோ திரைப்படமாக வெற்றியடைந்த திரைப்படம் க்ரிஷ் . க்ரிஷ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரித்திக் ரோஷன் மிரட்டியிருப்பார்.
 
க்ரிஷ்  திரைப்படங்களை நடிகர் ரித்திக் ரோஷனின் தந்தையான ராகேஷ் ரோஷன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. க்ரிஷ் முதல் பாகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற கிரிஷ் படம் அடுத்தடுத்து இரண்டாவது மூன்றாவது பாகங்கள் தயாராகி வெளிவந்தன.
 
கடைசியாக 2013ஆம் ஆண்டு வெளிவந்த கிரிஷ் (3) மூன்றாம் பாகத்தில் நடிகர் ரித்திக் ரோஷன் உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வில்லியாக நடித்திருந்தார். இந்நிலையில் கிரீஸ் 4 குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் ரித்திக் ரோஷன் க்ரிஷ் 4 தயாராவதை உறுதி செய்யும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரித்திக் ரோஷனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.க்ரிஷ் திரைப்படம் வெளியாகி 15 வருடங்களை கடந்ததை நினைவு கூறும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் நடிகர் ரித்திக் ரோஷன்  #KRRISH4 எனக் குறிப்பிட்டிருப்பது தற்போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)