விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் மற்றும் பிகில் படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்தவர் ஜி.கே.விஷ்ணு.மெர்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் விஷ்ணு.இந்த படத்திலேயே இவரது வேலையை பலரும் பாராட்டி இருந்தனர்.

தொடர்ந்து அட்லீ-விஜய் கூட்டணியில் உருவான பிகில் படத்திலும் ஒளிப்பதிவாளராக பட்டையை கிளப்பினார் விஷ்ணு.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திலும் இவரது வேலையை பலரும் பெரிதும் பாராட்டினர்.

அடுத்ததாக தெலுங்கில் ரவிதேஜா நடித்த க்ராக் படத்தில் ஒளிப்பதிவாளாரக கால்தடம் பதித்தார் விஷ்ணு.தெலுங்கிலும் பெரிய வரவேற்பை விஷ்ணு க்ராக் படத்தின் மூலம் பெற்றார்.அடுத்ததாக சில முக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக கலக்க உள்ளார் விஷ்ணு.

தற்போது விஷ்ணுவிற்கு மஹாலக்ஷ்மி என்பவருடன் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.கொரோனா காரணமாக பெரிதாக நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கலந்துகொள்ள இந்த நிகழ்வு  கோலாகலமாக நடைபெற்றது.கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.விஷ்ணுவிற்கும் அவரது மனைவி மஹாலக்ஷ்மிக்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.