பிக்பாஸ் தமிழ் சீசன் 5 உறுதியான 18 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ!!!
By | Galatta | October 03, 2021 20:37 PM IST
எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான விஜய் டிவியில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.
இதுவரை நான்கு சீசன்கள் நடைபெற்ற நிலையில் 5-வது சீசனின் அறிவிப்பு வந்ததிலிருந்தே சமூக வலைதளங்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களாக பல நட்சத்திரங்களின் பெயர்கள் உலா வந்தன. இந்நிலையில் இன்று பிரமாண்டமாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ போட்டியாளர்களாக, விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, பின்னணி பாடகி சின்னப்பொண்ணு, நடிகை பவானி ரெட்டி, நடிகர் வருண், இமான் அண்ணாச்சி மற்றும் யூ ட்யூப் பிரபலமான அபிஷேக் ராஜா உள்ளிட்டோர் நுழைந்துள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்கள்:
1.இசைவாணி - பாடகி
2.ராஜு ஜெயமோகன் - நடிகர்
3.மதுமிதா - ஆடை வடிவமைப்பாளர்
4.அபிஷேக் ராஜா - VJ / யூ ட்யூபர்
5.நமிதா மாரிமுத்து - மாடல்
6.பிரியங்கா தேஷ்பாண்டே - VJ / தொலைக்காட்சி தொகுப்பாளர்
7.பாவனி ரெட்டி - நடிகை
8.நதியா சங் - மலேசிய மாடல்
9.வருண் - நடிகர்
10.இமான் அண்ணாச்சி - நடிகர் / தொலைக்காட்சி தொகுப்பாளர்
11.ஐக்கி பெர்ரி - ராப் பாடகர் / மருத்துவர்
12.ஸ்ருதி ஜெயதேவன் - மாடல்
13.அபிநய் வட்டி - நடிகர் (ஜெமினி கணேசனின் பேரன்)
14.அக்ஷரா ரெட்டி - மாடல்
15.தாமரைச்செல்வி - மேடை நாடக நடிகர்
16.சின்ன பொண்ணு - பாடகி
17.சிபி சந்திரன் -நடிகர் (மாஸ்டர்)
18.நிரூப் நந்தகுமார் - மாடல் / நடிகர்
நாளை முதல் தினமும் இரவு 9:30 மணிக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 5 விஜய் தொலைக்காட்சியிலும் , டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்திலும் ஒளிபரப்பாகவுள்ளது.