பிக் பாஸ் நான்காவது சீசன் தற்போது 62 நாட்களை கடந்து இருக்கிறது. குறிப்பாக கமல் இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரையும் வறுத்தெடுத்தார். யாரும் டாஸ்க் சரியாக செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவர் அனைவரையும் விளாசினார். குறிப்பாக பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டியுடன் சண்டை போட்டு தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்டது பற்றியும், கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்கில் சண்டை போட்டது பற்றியும் கமல் கோபத்துடன் விமர்சித்தர்.

சிங்கப்பூர் பட்டிமன்றத்தில் பேசிய நிஷா இப்போது எங்கே, அவர் பிக் பாஸ் வீட்டுக்கு வராமல் வேறு யாரோ வந்திருப்போது போல இருக்கிறது என கூறி விமர்சித்தார். சனம் ஷெட்டிக்கு ஏன் இடறானாம் வாரத்தில் கால் வரவில்லை என கூறி கேட்டார் கமல். அதன் பின் ஜித்தன் ரமேஷை அவருடன் கால் பேச வைத்தார். போட்டியாளர்கள் செய்த தவறால் luxury Budget போச்சு என்றும், இது தனி நபர் கேம் என்றும் கமல் நினைவுபடுத்தினார்.

சனம் ஷெட்டி உடன் நடந்த சண்டை பற்றி கமல் பேசினார். எல்லாரும் வெளியில் ஒரு செருப்பு, வீட்டில் ஒரு செருப்பு என வைத்திருப்பார்கள். ஆனால் பாலாஜி மட்டும் மூன்றாவதாக முகத்தில் அடிக்க ஒரு செருப்பு என வைத்திருப்பார் என பேச தொடங்கிய கமல் ஒரு கட்டத்தில் பாலாஜி வன்முறையின் விளிம்பில் இருந்தார் என கூறினார். அதன் பின் பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என கமல் கேட்டார்.

பாலாஜி இப்படி செய்ததை அர்ச்சனா ஏன் கேட்கவே இல்லை என கமல் கேள்வி எழுப்பினர். அப்போது அர்ச்சனாவின் அன்பு மெடிக்கல் லீவ்ல போய்டுச்சா என கிண்டல் செய்தார். என்ன பதில் சொல்வது என தெரியாமல் அர்ச்சனா விழித்தார்.இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து ஆரி மற்றும் ரம்யா இருவரை காப்பாற்றுவதாக அறிவித்தார். மீதம் இருக்கும் ஐந்து பேரில் ஒருவர் நிச்சயம் வெளியேற்றப்படுவார் எனவும் கமல் தெரிவித்து இருந்தார்.

இப்படியிருக்க இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சனம், அனிதா, ஷிவானி ஆகிய மூவரில் யார் தங்கவேண்டும் என்று பரிந்துரை செய்ய சொன்னார் கமல். ஹவுஸ்மேட்ஸ் பலர் சனத்திற்கு ஆதரவாக பேசினார்கள். ஆரியை கேட்கும் போது அனிதா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று வெளிப்படையாக கூறினார். வெளியேற்றம் அல்ல யார் தங்க வேண்டும் என்று கூறுங்கள் என்று கமல் நினைவு படுத்தினார். அவரும் சனத்திற்கு தனது வாக்கினை அளித்தார். இதன் சனம் காப்பாற்றப்படுவாரா ? அனிதா இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதா என்ற ஆவலில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.