பிக் பாஸ் சீசன் 4 வரும் ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவு பெற இருக்கிறது. அதனால் ரசிகர்களும் வெற்றியாளரை தீர்மானிக்க ஓட்டு போடும் வேலையில் செம பிஸியாக இருந்து வருகின்றனர். மொத்தம் 6 பேர் பிக் பாஸ் பைனலிஸ்ட் ஆக இருக்கும் நிலையில் நேற்று கேபி 5 லட்சம் ருபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார். அது ரியோ உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று ஷிவானி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் கடந்த வாரம் தான் எலிமினேட் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வீட்டுக்குள் வந்ததும் அனைவருடனும் பேசி கொண்டிருந்தார். ஆனால் பாலாஜி உடன் மட்டும் பேசவே இல்லை. அது முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஷிவானி பாலாவிடம் நலம் விசாரிக்கிறார். ஏன் டல் ஆக இருக்கே ? உடம்பு சரியில்லையா என கேட்கிறார். அப்படி எல்லாம் இல்லை என பாலாஜி கூறிய நிலையில், வந்ததில் இருந்து டல் ஆக இருந்தது போல இருந்தது என்று ஷிவானி கூறுகிறார்.

இந்த உரையாடலுக்கு ரொமான்டிக் ஆன ஒரு பிஜிஎம் ப்ரொமோ வீடியோவில் போடப்பட்டு இருக்கிறது. அதை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தற்போது எடிட்டரை கலாய்த்து தள்ளி வருகின்றனர். கமல் ஹாசன் வரும் போது அவர் நடித்த படங்களில் இருந்து ப்ரோமோ பின்னணி இடம்பெறுகிறது. அந்த வகையில் மற்ற ப்ரோமோக்களில் இஷ்டத்திற்கு பின்னணி இசையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வெற்றியாளரை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள். யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் யார் யார் வருவார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வத்தில் உள்ளனர் தொலைக்காட்சி பிரியர்கள்.