விஷ்ணு விஷால் நடித்த வேலைனு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக மாறியவர் ரேஷ்மா.அடுத்ததாக விஜய் டிவியின் பெரிய ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக பங்கேற்று அசத்தினார் ரேஷ்மா.

பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த பின் சில சூப்பர்ஹிட் தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் ரேஷ்மா.திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதற்கு முன்பே பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து தனது திறமையை நிரூபித்திருந்தார்.

அன்பே வா தொடரில் முக்கிய வேடத்தில் அசத்தி வந்த ரேஷ்மா சமீபத்தில் அந்த தொடரில் இருந்து விலகினார்.சமீபத்தில் பாக்கியலக்ஷ்மி தொடரில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக இணைந்தார்,அடுத்து அபி டைலர் தொடரிலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் ரேஷ்மா.தற்போது தனது நீச்சல்குள வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ரேஷ்மா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.