விஷ்ணு விஷால் நடித்த வேலைனு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக மாறியவர் ரேஷ்மா.அடுத்ததாக விஜய் டிவியின் பெரிய ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக பங்கேற்று அசத்தினார் ரேஷ்மா.

பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த பின் சில சூப்பர்ஹிட் தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் ரேஷ்மா.திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதற்கு முன்பே பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து தனது திறமையை நிரூபித்திருந்தார்.

அன்பே வா தொடரில் முக்கிய வேடத்தில் அசத்தி வந்தார் ரேஷ்மா.சமீபத்தில் பாக்கியலக்ஷ்மி தொடரில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக இணைந்தார்,அடுத்து அபி டைலர் தொடரிலும் நடித்து வருகிறார்.சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடர் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.

தற்போது இந்த தொடரில் இருந்து இவர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவருக்கு பதிலாக அந்த வேடத்தில் வினோதினி நடிக்கிறார் இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.ரேஷ்மா திடிரென்று வெளியேறியதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.