தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் பிரபல தொகுப்பாளராகவும் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராகவும் கலந்துகொண்டு பல ஆண்டுகளாக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் தொகுப்பாளர் அச்சுமா என ரசிகர்கள் அழைக்கும் அர்ச்சனா.  

தமிழ் சின்னத்திரை உலகில் முன்னணி தொகுப்பாளராக திகழும்  அர்ச்சனா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளையில் செரிப்ரோஸ்பினல் திரவ கசிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அர்ச்சனாவுக்கு செரிப்ரோஸ்பினல் திரவப் புனரமைப்பு அறுவை சிகிச்சை  மேற்க்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா பகிர்ந்துள்ளார்.

அன்பான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் குடும்பத்தினருக்கு வணக்கம்!!!  அனைவரும் நலமோடு இருக்கிறீர்கள் என நம்புகிறேன்

நான் எப்போதும் என் இதயத்தின் வழியில் செயல்படுவதால் எனது மூளை கோபித்துக் கொண்டது போல தெரிகிறது. அதனால் எனது மூளை என் இதயத்தை விட பெரியது என்பதை நிரூபிக்க ஒரு சிறிய சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. என் மண்டையோட்டில் குத்திய மூலையில் சிறிய துளை ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்தாக வேண்டும்.

இந்த சிறு துளையால் செரிப்ரோஸ்பினல் திரவக் கசிவு ஏற்பட்டு உள்ளது. எனவே செரிப்ரோஸ்பினல் திரவக் கசிவு புனரமைப்பு அறுவை சிகிச்சையை இன்று மேற்கொள்கிறேன்.  எனது மண்டையோட்டிற்கும் மூளைக்கும் நடுவில் இந்த கசிவு ஏற்பட்டுள்ளது என MRI ஸ்கேன் மூலம் தெரியவந்தது. 

மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் எனக்கு மூளை இருப்பதை நிரூபித்திருக்கிறது. காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பின்னர் நான் வீடு திரும்புவேன். 

எதிர்பாராத இந்த பிரச்சினையால் தொலைபேசி அழைப்புகளை எடுக்காமல் போகலாம் ஆனால் கட்டாயமாக சாரா எனது உடல்நிலை குறித்த தகவல்களை பகிர்ந்து வருவார்.

ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் காண வருவேன்…  இது உங்கள் அர்ச்சனா!!

எனக்கும் சேர்த்துக் உங்கள் பிரார்த்தனைகளை செய்யுங்கள்…

அன்புடன் ...இன்றும் என்றும் 

உங்கள் அச்சுமா 

என பதிவிட்டுள்ளார் விரைவில் அர்ச்சனா வீடு திரும்ப  ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது பிரார்த்தனைகளை பகிர்ந்து வருகிறார்கள். 

அன்பு ஜெயிக்கும்!!! அச்சுமா விரைவில் நலமுடன் திரும்பி வாருங்கள்.