தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.மாஸ்டர் படத்தினை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் Beast படத்தில் நடித்து வருகிறார்.நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.

தளபதி விஜய் தனது நாற்பத்தி ஏழாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்,இதனை முன்னிட்டு இவரது Beast படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இவருக்கு உலகமெங்கும் இருக்கும் ரசிகர்களும்,பல சூப்பர்ஸ்டார்களும்,திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Beast படத்தின் ஷூட்டிங்கின் போது Georgiaவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றோடு தன்னுடைய வாழ்க்கையில் மிகமுக்கியமானவர் நீங்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.தளபதியின் செம கேசுவலான இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.தளபதி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஜெகதீஷ் ட்விட்டர் ஸ்பேஸ் ஒன்றையும் நட்சத்திரங்களை ஒன்றிணைத்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Jagadish (@jagadishbliss)