களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் A.சற்குணம். இதனையடுத்து இவர் இயக்கிய வாகை சூட வா திரைப்படம் தேசிய விருது பெற்றது. இந்நிலையில் இயக்குனர் A.சற்குணம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அதர்வா நடிப்பில் குருதியாட்டம் & தள்ளிப்போகாதே ஆகிய திரைப்படங்கள் தயாராகி விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இயக்குனர் A.சற்குணம் இயக்கத்தில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் தற்போது நடிக்கிறார்.

முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகும் இத்திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜே பி, ஆர்.கே.சுரேஷ், சிங்கம் புலி, ரவி காலே, சத்ரு, பாலசரவணன், ராஜ் ஐயப்பா, ஜிஎம்.குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையை மனதில் கொண்டு இத்திரைப்படத்தை ஒரே கட்டமாக 50 நாட்களில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அந்த வகையில் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தஞ்சாவூரில் தொடங்கியது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.