தமிழ் திரையில் தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோ முரளியின் மகன் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக 100 திரைப்படம் வெளியானது. அதர்வா கைவசம் ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம் போன்ற படங்கள் உள்ளது. 

Atharva Opens About His Dad On His Birthday

இந்நிலையில் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இன்று தனது தந்தை முரளிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், எனக்கு தெரிந்தவரை, ரொம்ப கூலான, அதே சமயம் மிகவும் வலிமையான மனிதர் நீங்கள்தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. உங்களை தினமும் காதலித்து கொண்டும், மிஸ் செய்து கொண்டும் இருக்கிறோம் என எமோஷனலாக பதிவு செய்துள்ளார். மேலும் இத்துடன் சிறுவயதில் அப்பாவுடன் எடுத்த புகைப்படங்களை அத்துடன் இணைத்துள்ளார். 

Atharva Opens About His Dad On His Birthday

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் தள்ளிப் போகாதே படத்தில் நடித்து வருகிறார். பிரேமம் புகழ் அனுபமா ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படத்தில் நடிகர் அமிதாஷ் பிரதான் முக்கிய ரோலில் நடிக்கிறார்.