நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஈஸ்வரன்.இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக இந்த ஆண்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. 

அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தயாராகிறது. சமீபத்தில் படபிடிப்பை தொடங்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி.K.கணேஷ் தயாரிக்கிறார்.

அதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க நடிகர் கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் கலையரசன் டிஜே அருணாசலம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தயாராகும் இப்படத்தை ஓபெலி.என்.கிருஷ்ணா இயக்குகிறார். 

இந்நிலையில்  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் பாடகருமான டிஜே அருணாச்சலம் சிலம்பரசனின் பத்து தல திரைப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இதுகுறித்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பத்து தல படத்திற்காக தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் இதோ...