விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் மூலம் பல போட்டியாளர்களும்,காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய வரவேற்பை பெற்றவர் அஷ்வின்.இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து என்ன சொல்ல போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.அதேபோல கோமாளியாக வந்து பிரமபமடைந்தவர் சிவாங்கி.இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சிவாங்கி.

இவர் பாடிய அஸ்கு மாறோ பாடல் சமீபத்தில் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்தது.இதே போல அஷ்வின் நடித்த சில ஆல்பம் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.அஷ்வின் அடுத்ததாக அடிபொலி என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார்.குஷீ ரவி இந்த பாடலில் அஷ்வினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.சித்து குமார் இந்த பாடலுக்கு இசையமைத்து இயக்கியுள்ளார்.

இந்த பாடலை சிவாங்கி மற்றும் பிரபல மலையாள நடிகர்,இயக்குனர் வினீத் ஸ்ரீநிவாசன் இணைந்து  பாடியுள்ளனர்.இந்த பாடல் காலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலின் வீடீயோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.செம ஜாலியான இந்த வீடியோ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.