கேஜிஎப் 2 ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய முன்னணி சேனல் !
By Aravind Selvam | Galatta | August 20, 2021 13:11 PM IST
2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையா
இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பு.இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.
கே.ஜி.எப் படத்தினை ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்த படத்தின் தமிழ்நாடு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வாங்கியுள்ளனர்.தற்போது இந்த படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தென்னிந்திய மொழிகளின் ஒளிபரப்பு உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#KGFChapter2 locks its official worldwide satellite destination for South languages on ZEE 📺@TheNameIsYash @prashanth_neel @VKiragandur @hombalefilms @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7#KGF2SouthOnZee@ZeeKannada @ZeeTVTelugu @ZeeTamil @ZeeKeralam pic.twitter.com/DZ2ROyddc7
— Hombale Films (@hombalefilms) August 20, 2021