தமிழில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அசோக்செல்வன் தொடர்ந்து, டிடெக்டிவ் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த தெகிடி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அசோக் செல்வன் தொடர்ந்து பீட்சா 2, கூட்டத்தில் ஒருவன், முப்பரிமாணம், சம்டைம்ஸ் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக  நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் தீனி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் மலையாளத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் மரைக்கார்-அரபிக்கடலின்டே சிம்மம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது. ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா இணைந்து தயாரிக்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட் நிறுவனம் வழங்குகிறது. நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருடன் அபிஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரேயா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், அனுபமா குமார், பானுப்பிரியா மற்றும் இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

இயக்குனர் விஷால் வெங்கட் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ரதன் இசையமைக்கிறார். சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தை இன்று உலக நாயகன் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து தற்போது சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .நடிகர் தனுஷ், சில நேரங்களில் சில மனிதர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.