தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் டைரி திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருள்நிதி 15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய திரைப்படத்தை MNM பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அரவிந்த் சிங் தயாரித்திருந்தார். 

பிரபல யூட்யூப் சேனலான எரும சாணி யூடியூப் சேனலின் விஜய் குமார் ராஜேந்திரன் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அவந்திகா கதாநாயகியாக நடிக்க இசையமைப்பாளர் ரான் எதான் யோஹன் இசையமைக்கிறார்.தற்போது இத்திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய இயக்குனர் விஜயகுமார் ராஜேந்திரன்,எனது முதல் திரைப்படத்தை இயக்கும், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, எனது முழுத்திறமையை மட்டும் நிரூபித்தால் போதாது, சினிமா இயக்கும் கனவுகளோடு இருக்கும், மற்ற YouTuber களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க வேண்டும், எனபதில் உறுதியாக இருந்தேன். தற்போது எனது படைப்பு, Sakthi Film Factory நிறுவனம் போன்ற மிகப்பெரும் நிறுவனத்தால் அங்கீகரிகப்பட்டு, அவர்கள் மிகப்பெரும் வெளியீடாக, இப்படத்தை வெளியிட இருப்பது,  மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

இப்படம் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக இருக்கும். அதிலும் கல்லூரி பின்னணியில் கதை நடப்பதால், இளைஞர்களை கண்டிப்பாக ஈர்க்கும். மிகப்பெரிய அளவில் படத்தினை விளம்பரப்படுத்தி, அனைத்து ரசிகர்களிடமும் இப்படத்தினை கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்  என தெரிவித்திருக்கிறார்.  

கலகலப்பான என்டர்டைன்மென்ட் திரைப்படமாக தயாராகும் அருள்நிதி 15 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.