உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வண்ணம் பலரும் தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.

Arivum Anbum How its made in midst lockdown

ஜிப்ரான் இசையில் உருவாகும் அறிவும் அன்பும் என்ற விழிப்புணர்வு பாடல் உருவாகியுள்ளது.இதில் கமலுடன் இணைந்து யுவன்,அனிருத்,தர்ஷன்,தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட 11 பிரபலங்கள் பணியாற்றியுள்ளனர்.கொரோனா குறித்த விழிப்புணர்வையும் மனிதத்தையும் போற்றும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

Arivum Anbum How its made in midst lockdown

இந்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ஊரடங்கு காலத்தில் இந்த பாடலை உருவாக்கியது குறித்தும் அனைவருடனும் வேலை பார்த்த அனுபவம் குறித்தும் ஜிப்ரான் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்