இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆஸ்கார் விருதை வென்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,ஆங்கிலம் என்று செம பிஸியாக வேலைபார்த்து வருகிறார்.

AR Rahman Advises People To Stay Positive Corona

தமிழில் விஜய் நடித்த பிகில் படத்திற்கு இசையமைத்திருந்தார்.இதனை தொடர்ந்து அயலான்,கோப்ரா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இவர் ஹிந்தியில் இசையமைத்த 99 சாங்ஸ் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

AR Rahman Advises People To Stay Positive Corona

தற்போது கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவி வருகிறது.ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலே இருக்கின்றனர்.இது குறித்து ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கடினமான நேரங்களை கடினமான மனிதர்களே கடப்பார்கள் நம்பிக்கையுடன் தைரியமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.