சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக 2020 பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் இந்த படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சூப்பர்ஸ்டாரின் மாஸ் காட்சிகள் நிறைந்த இந்த டீஸர் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வைக்கும் வகையில் உள்ள இந்த டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்