ஃபேஸ்புக்கில் அறிமுகமான நண்பன் ஒருவன், பள்ளி டீச்சரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் காட்லோடியா பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணி புரிந்து வருகிறார்.

தற்போது, கொரோனா விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் தொடர்ந்தாலும், கொரோனா விடுமுறை காலங்களில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியிகாவே
ஆசிரியர்கள் பெரும்பாலும் பாடம் நடத்தி வந்தனர்.

அப்படியான பழக்கத்தில், குறிப்பிட்ட இந்த 40 வயதான ஆசிரியரும் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் வகையிலான செல்போன் ஒன்றை வாங்கி பாடம் எடுத்த மீதி
நேரத்தில் சோசியல் மீடியாவில் தனது நேரத்தை செலவிட்டு வநதார்.

அப்போது, அந்த பெண் ஃபேஸ்புக்கில் புதிதாக கணக்கு தொடங்கிய நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் அந்த பெண் வசிக்கும் மாவட்டத்தில்
உள்ள வாஸ்ட்ராலை பகுதியைச் சேர்ந்த ரூபேஷ் பட்டேல் என்ற 33 வயதான இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிற்கு ஃபேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆகி உள்ளார். 

இதனையடுத்து, அந்த 40 வயது டீச்சரும், இந்த 33 வயது இளைஞனும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். இருவரும் அடிக்கடி சாட்டிங் செய்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் வாட்ஸ்ஆப் வாயிலாகவும் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர். போன் செய்தும் பேசிக்கொண்டு தங்களது நட்பை இன்னும் வளர்த்துக்கொண்டனர்.

அப்படியான நேரத்தில், அந்த 40 வயதான டீச்சர் மீது சற்று சபலமடைந்த அந்த 33 வயதான அந்த இளைஞன், அந்த டீச்சரை ஒரு முறை பாலியல் உறவு கொள்ள
அழைத்திருக்கிறார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த டீச்சர், இதற்கு மறுப்பு தெரிவிகக்வே, அந்த இளைஞன் பலமுறை அவரை இதற்கு வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால், அந்த டீச்சர்
கடைசி வரை அதற்கு சம்மதிக்காமல் இருந்து உள்ளார். 

இதனால், சற்று கோபம் அடைந்த இளைஞன் படேல், அந்த டீச்சரிடம் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் பொய்யாக பேசி, அவரை தனிமையான ஒரு இடத்திற்கு
வரவழைத்திருக்கிறார்.

அந்த பெண்ணும், நண்பன் தான் தனியாக பேச அழைக்கிறான் என்ற நம்பிக்கையில், அந்த இளைஞன் கூறிய இடத்திற்கு தனியாக வந்திருக்கிறார்.

அப்போது? அங்கு ஒளிந்திருந்த படேல், அந்த டீச்சரை அங்கிருந்து கடத்திச் சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம்
செய்திருக்கிறார். இதனையடுத்து, அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த டீச்செர், கடும் மன உலைச்சலுக்கு ஆளாகி, அங்குள்ள காட்லோடியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து
வழக்குப் பதிவு செய்த போலீசார், படேலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை  
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.