லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். தற்போது சென்னையில் படப்பிடிப்பு போய் கொண்டிருக்கிறது. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

master kuttystory

படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். 

master master

மில்லியன் கணக்கில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து வரும் இப்பாடல் உலகம் முழுக்க வலம் வருகிறது. இதுகுறித்து ராக்ஸ்டார் அனிருத் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர் விஜய் ரசிகர்கள்.