தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் மஹத். மங்காத்தா மற்றும் ஜில்லா போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பில் ஈர்த்திருப்பார். தற்போது இயக்குனர் மேக்வென் இயக்கத்தில் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் இவன் தான் உத்தமன். சமீபத்தில் நடிகர் மஹத்தின் திருமணம் நடைபெற்றது. 

ivanthanuthaman

ஹாரர் த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் தயாராகிறது. தமன் இசையமைக்கும் இதற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இதனை பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரிக்கிறார். 

mahat

சமீபத்தில் இப்படத்திலிருந்து STR பாடிய டேய் மாமா எனும் பாடல் வெளியானது. இதற்கு மணி அமுதவன் வரிகள் எழுதியிருந்தார். யாஷிகா ஆனந்த், மாகாபா ஆனந்த், மனோபாலா, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று நடிகர் மஹத் ராகவேந்திராவின் பிறந்தநாள் என்பதால் புதிய போஸ்டரை வெளியிட்டு அசத்தியுள்ளனர் படக்குழுவினர்.