சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivakarthikeyan Ayalaan First Look Poster Released

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.

Sivakarthikeyan Ayalaan First Look Poster Released

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.டைம் ட்ராவல் சம்மந்தப்பட்ட இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.மிகவும் வித்தியாசமான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்