தமிழ் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமான இந்த நடிகை அமலாபால் தொடர்ந்து இயக்குனர் A.L.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், இயக்குனர் லிங்குசாமியின் வேட்டை, நடிகர் சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம்பிடித்தார். 

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவில் முன்னணி மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார்.தளபதி விஜய்யுடன் தலைவா, நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, நடிகர் சூர்யாவுடன் பசங்க 2, விஷ்ணு விஷாலின் ராட்சசன் ஆகிய படங்களில் நடித்த அமலா பால், அம்மா கணக்கு & ஆடை உள்ளிட்ட கதாநாயகிகளை முன்னிறுத்தும் திரைப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அடுத்ததாக தெலுங்கில் தயாராகி வரும் குடி யெடமைத்தே என்னும் புதிய வெப்சீரிஸில் நடித்து வருகிறார் அமலா பால். பிரபல இயக்குனர் பவன் குமார் இயக்கும் வெப்சீரிஸில் நடிகை அமலாபால் முன்னணி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்க ராகுல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வருகிற ஜூலை 16ம் தேதி aha OTT தளத்தில் குடி யெடமைத்தே வெளியாகிறது.

இன்ஸ்பெக்டர் துர்கா என்னும் காவல்துறை அதிகாரியாக குடி யெடமைத்தே வெப்சீரிஸில் அமலாபால் நடித்திருக்கிறார். முன்னதாக வெளிவந்த டீசர் மற்றும் போஸ்டர்கள் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகை அமலாபால் நடிக்கும் இன்ஸ்பெக்டர் துர்கா கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது ட்ரெண்டாகி வரும் இந்த புதிய ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.