தமிழக சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டான ராஜாராணி மெகா சீரியலில் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தனர். மேலும் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த இருவருக்கும் நிஜத்திலும் காதல் மலர்ந்தது.

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஆல்யா மானசா & சஞ்சீவ் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக இந்த CELEBRITY தம்பதியினருக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து சஞ்சீவ் விஜய் டிவியில் காற்றின் மொழி மெகா சீரியலில் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் மெகா தொடரில் நடித்து வருகிறார்.

ஆல்யா மானசா ராஜா ராணி பார்ட்-1 வெற்றியைத் தொடர்ந்து ராஜா ராணி பார்ட்-2 வில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். வழக்கம்போல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ராஜா ராணி 2 மெகா தொடர் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார்.

எனவே ஆல்யா மானசாவிற்கு பதிலாக ராஜா ராணி மெகா தொடரில் சந்தியா கதாபாத்திரத்திற்கு ரியா என்ற நடிகை தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் ஆல்யா மானசா & சஞ்சீவ் தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை தற்போது பிறந்துள்ளது. இதனை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)