2015-ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமம்.மலையாளம் சினிமாவின் காதல் படங்களுக்கு ஒரு புது விளக்கம் கொடுத்த படம்.என்னதான் நம்ம சேரனின் ஆட்டோகிராப் போல படம் இருந்தாலும் படத்தில் ஒரு உயிர் இருந்தது.மலையாளம் சினிமாவின் பக்கம் அதிக தமிழ் ரசிகர்களை ஈர்த்த படம்.நிவின் பாலி,சாய் பல்லவி,அனுபமா,மடோனா என்று பல பிரபலங்களை நட்சத்திரங்களாக மாற்றிய படம்.

சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடிய மலையாள படம் என்று பல சாதனைகளை இந்த படம் படைத்திருந்தது.இத்தகைய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கடந்த சில வருடங்களாக வேறு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்,சமீபத்தில் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் அல்போன்ஸ்.கோல்ட் என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தினை ப்ரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ப்ரித்விராஜ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கோ,நெற்றிக்கண்,அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்த அஜ்மல் நடிக்கிறார் என்றும் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் என்ற தகவலை அஜ்மல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Ajmal Amir (@ajmal_amir)