தமிழ் திரையுலகில் தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர், தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். எதார்த்தமான ரோல், கிராமத்து பெண் வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார் ஐஸ்வர்யா. 

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் க.பெ.ரணசிங்கம், பூமிகா ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன. ட்ரக் ஜெகதீஷ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் திட்டம் இரண்டு என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் நேரத்தில், நடிகைகள் பலரும் தங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் என ஷேர் செய்து வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தனது க்யூட் போட்டோக்களை சமீபத்தில் ஷேர் செய்தார். அந்த வகையில் க்ரேஸி எக்ஸ்பிரஷன்ஸ் என பழைய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அசத்தினார். 

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குனர் ரத்தினம் பிரசாத் இயக்கவிருக்கும் பூமிகா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வெளியானது. சிவகார்த்திகேயன் இதை வெளியிட்டார். நாயகி முக்கியத்தும் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படமாக தெரிகிறது. 

இது தவிர்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் க.பெ. ரணசிங்கம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.