கோலாகலமாக நடைபெற்ற நடிகை பரினீதி சோப்ரா - ஆம் ஆத்மி MP ராகவ் சத்தா திருமணம்… வைரல் புகைப்படங்கள் இதோ!

நடிகை பரினீதி சோப்ரா ஆம் ஆத்மி MP ராகவ் சத்தா திருமணம்,parineeti chopra gets married with ragav chadha | Galatta

பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற எம்பி ராகவ் சத்தாவை, பரினீதி சோப்ரா திருமணம் செய்திருக்கிறார். விவிஐபி-கள் மிக நெருங்கிய குடும்ப வட்டாரத்தோடு நடைபெற்ற பரினீதி சோப்ரா மற்றும் ராகவ சத்தா திருமணத்திற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புதுமண தம்பதியினருக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உலக அளவில் பிரபலமான நடிகையாக திகழும் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்களின் அத்தை மகளான பரினீதி சோப்ரா கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லேடிஸ் vs ரிக்கி பாய் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர். தொடர்ந்து இஷக்சாதே, சுத் தேசி ரொமான்ஸ், தாவத் ஈ இஷ்க், கில் தில், மேரி பியார் பிந்து, கோல்மால் அகைன், நமஸ்தே இங்கிலாந்து, கேசரி, தி கேர்ள் ஆன் தி ட்ரைன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு கோட் நேம் - ட்ரையங்கா மற்றும் உன்ஜாய் உள்ளிட்ட படங்களில் நடித்த பரினீதி சோப்ரா நடிப்பில் அடுத்த வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் சம்கிலா. இதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் கேப்சூல் கில் படத்தில் பரினீதி சோப்ரா கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார்.


இதனிடையே ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த MP ராகவ் சதா மற்றும் பரீனீதி சோப்ரா நீண்ட காலமாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த நிலையில், ஆரம்பத்தில் பரினீதி சோப்ரா மற்றும் ராகவ சத்தா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. அதன் பின்னர் தங்களது காதலை அறிவித்த இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மண், நடிகை பிரியங்கா சோப்ரா, மனிஷ் மல்கோத்ரா, அபிஷேக் மனு சிங்வி, மற்றும் டெரிக் ஓ ப்ரெய்ன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். 

இதனை அடுத்து இவர்களது திருமணம் நேற்று செப்டம்பர் 24 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் மிகவும் கோலாகலமாக விவிஐபி-கள் மிக நெருங்கிய குடும்ப வட்டாரத்தோடு நடைபெற்ற பரினீதி சோப்ரா மற்றும் ராகவ சத்தா திருமண விழாவில் பிரியங்கா சோப்ரா ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பகவான் நடிகர்கள் அக்ஷய் குமார் ஆயுஷ்மான் குரானா அர்ஜுன் கபூர் மற்றும் கரன் ஜோகர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது இவர்களது திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன. நடிகை பரினீதி சோப்ரா தனது பக்கத்தில் திருமண புகைப்படங்களை தனது X பக்கத்தில் வெளியிட்டு, “காலை உணவு உண்ணும் போது முதல் முறை பேச ஆரம்பித்ததில் இருந்து எங்களது இதயங்களுக்கு இது தெரியும். இந்த நாளுக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். கடைசியாக திரு மற்றும் திருமதி-யாக ஆனதற்கு ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறோம். ஒருவருக்கொருவர் இல்லாமல் வாழ்ந்து இருக்க முடியாது.. எங்களுடைய என்றென்றும் இப்போது தொடங்குகிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாகும் நடிகை பரினீதி சோப்ரா - ராகவ சத்தா திருமண புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

From the very first chat at the breakfast table, our hearts knew. Been waiting for this day for a long time .. So blessed to finally be Mr and Mrs!

Couldn’t have lived without each other .. Our forever begins now .. 💖 pic.twitter.com/M1xQ8BIHLt

— Parineeti Chopra (@ParineetiChopra) September 25, 2023