துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் இணையும் ஸ்போர்ட்ஸ் படம்... பிறந்தநாள் பரிசாக வந்த ஸ்பெஷல் அறிவிப்பு GLIMPSE இதோ!

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் இணையும் ஸ்போர்ட்ஸ் படத்தின் அறிவிப்பு,dhruv vikram mari selvaraj in sports film announcement | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகர் துருவ் விக்ரம். சீயான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நேற்று செப்டம்பர் 23ஆம் தேதி தனது 26 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அந்த வகையில் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் நடிகர் துருவ் விக்ரம் இணையும் புதிய ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் தனது இரண்டாவது திரைப்படத்தில் தனது தந்தை சீயான் விக்ரம் உடன் இணைந்தார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் விக்ரம் இணைந்து துருவ் விக்ரம் நடித்த மகான் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் துருவ் விக்ரம் இணையும் படத்திற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். தனக்கென தனி பானியில் தொடர்ச்சியாக சமூக நீதிப் பேசும் தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தனது இரண்டாவது படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்த இயக்குனர் மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக வெற்றி பெற்றது. இந்த வரிசையில் கடைசியாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிப்பதால் சினிமாவை முற்றிலும் விட்டு விட்டு முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்ததால் தனது கடைசி படமாக மாமன்னன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த மாமன்னன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. 

அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சொந்த தயாரிப்பில் வாழை எனும் படத்தை இயக்கியுள்ள நிலையில், கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் தனுஷ் உடன் அவரது சொந்த தயாரிப்பில் உண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் பிரம்மாண்டமான ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதனிடையே கபடி விளையாட்டை மையப்படுத்திய ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தில் துருவிக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திய கபடி விளையாட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த மனத்தி.பி.கணேசன் அவர்களின் பயோபிக் படமாக உருவாகும் இந்த படத்தில் கபடி விளையாட்டு வீரராக துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அறிவிப்பு எப்போது வரும் என எல்லோரும் காத்திருந்த நிலையில் நேற்று செப்டம்பர் 23ஆம் தேதி துருவ் விக்ரமின் பிறந்தநாள் பரிசாக அறிவிப்பு வெளியானது. இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். இது பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் தனது X பக்கத்தில், துருவ் விக்ரம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி என தெரிவித்து துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் 03 - 05 என்ற எண்கள் கொண்ட ஜெர்சி அணிந்தபடி இருக்கும் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் அந்த பதிவு மற்றும் போஸ்டர் இதோ…
 

Happiest birthday wishes dear #DhruvVikram. Wishing you good health and success. May you achieve everything you've dreamt off

So happy to be working with you, @mari_selvaraj @Tisaditi @officialneelam @NeelamStudios_ pic.twitter.com/DdPdNREpGo

— pa.ranjith (@beemji) September 23, 2023