"சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான் ரிலீஸில் மாற்றம்... ரசிகர்கள் எதிர்பார்த்த டீசர் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான் ரிலீஸில் மாற்றம்,sivakarthikeyan in ayalaan movie release date changed | Galatta

மக்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு தற்போது உலகநாயகன் கமஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமான ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக தயாராகி வருகிறது அயலான் திரைப்படம். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள அயலான் திரைப்படத்தில், இஷா கோபிகர், சரத் கேல்கர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் & KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்கும் அயலான் திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு அயலான் படத்தின் முதல் பாடலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடி வெளிவந்த வேற லெவல் சகோ பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அட்டகாசமான ஏலியன் திரைப்படமாக தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் VFX பணிகளுக்காக மட்டுமே 40 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட VFX பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு  தீபாவளி வெளியீடாக அயலான் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2023 தீபாவளி வெளியீடாக வெளிவர இருந்த சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் அடுத்த 2024 ஆம் ஆண்டில் பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்து KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது X பக்கத்தில், "இந்த பொங்கல் ஒரு வேற்று கிரக உபசரிப்பாக இருக்கப்போகிறது. இதுவரை நீங்கள் அனுபவம் செய்திடாத அட்டகாசமான தரத்தில் அயலான் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக இந்த நேரத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இது நிச்சயமாக உங்களுக்கு திரையரங்குகளில் படத்தை கொண்டாட வைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஏற்கனவே நீங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறீர்கள் இன்னும் சில மாதங்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய அன்பிற்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம். வருகிற அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அயலான் படத்தின் டீசர் உங்களுக்காக வருகிறது." என படக்குழு அறிவித்துள்ளது. பொங்கல் விருந்தாக வர இருக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வர இருப்பதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் இந்த அட்டகாசமான அறிவிப்புடன் புதிய போஸ்டர் ஒன்று வெளி வந்திருக்கிறது. அந்த போஸ்டர் இதோ...
 

It's going to be an extraterrestrial treat this Pongal/Sankranti 🌾🪔

With the primary goal of ensuring that our #Ayalaan reaches its full potential, we believe some extra time will allow us to enhance the film's quality for a remarkable viewing experience. We are confident that… pic.twitter.com/GOxv5c0rdZ

— KJR Studios (@kjr_studios) September 23, 2023