குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமாகி பின்னர் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து ரஜினி முருகன்,REMO உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகையாக வளர்ந்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து பென்குயின், மிஸ் இந்தியா என கதாநாயகியை முன்னேறட்டும் திரைப்படங்களிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ஊரடங்கிற்கு பிறகு அடுத்ததாக தமிழில் கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் சாணி காயிதம்  படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட சாணி காயிதம்  படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ள நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று சாணி காயிதம்  படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். 

முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன் நடிகராக களம் இறங்கும் சாணி காயிதம்  திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress keerthy suresh resumes her shooting in saani kaayidham