சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமாக வெளிவருகிறது அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்கும் அண்ணாத்த படத்தின் மூலம் முதன்முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் இயக்குனர் சிவா.இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கும் அண்ணாத்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகைகள் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சதீஷ், சூரி, வேல ராமமூர்த்தி, ஜாக்கி ஷெராப், ஜார்ஜ் மரியான், பாலா என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இந்த ஆண்டு வருகிற நவம்பர் 4ஆம் தேதி அண்ணாத்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் இறுதிகட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பகுதி காட்சிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் மற்ற நடிகர்கள் நடிக்கும் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மறுபுறம் அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அண்ணாத்த படபிடிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவாவின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படப்பிடிப்பில் இயக்குனர் சிவாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.